Latest News

14 Apr 2016

தன் பொய்யில் பூத்த முதல்வரை எதை மறப்பது எதை ஏற்பது என்று!




தமிழன் கேட்கிறான் தன் பொய்யில் பூத்த முதல்வரை எதை மறப்பது எதை ஏற்பது என்று!
கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ போல் உயர்ந்த விலைவாசியையா?
கேவலம் மதவெறி கொண்டு பாஜக மற்றும் அதிமுக கட்சிகளிடையே பாலம் கட்டத்துடித்த சோ என்ற கிழவனின் தமிழ் எதிர்ப்பு கொள்கைகளுக்குண்டான உங்கள் அங்கீகாரத்தையா?
கோடிக் கோடியாய் நீங்கள் சம்பாதிக்க என் விவசாயிகள் வங்கிக்கடனை கூட செலுத்தவழியில்லாமல் அடிவாங்கிய நிலையையா?
நூலகம் இருக்குமிடத்தில் அறிவு செழிக்குமென்பர், ஆசிய கண்டத்திலேயே பெரிதாக நூலகத்தை உங்கள் அரசியல் எதிரி கட்டிய ஒரே காரணத்தினால் அதை அழிக்க நினைத்தீரே அதற்காகவே?
எத்தனையோ தமிழ் சான்றோர்களிருக்க உங்கள் தனிப்பட்ட வாழ்வில் நின்ற சோபன்பாபுவுக்கு அதிகப்படியான வாகனநெறிசல் உள்ள நெல்லசன் மாணிக்கம் சாலையில் சிலை வைத்து அழகு பார்தைமைக்கா?
110 விதிக்கே அரத்தமற்ற நிலையை உண்டாகியமைக்கா? இல்லை தமிழர் சிந்திக்கவே கூடாதென்பதற்காக மது கொண்டு மயக்கப்படுத்தி,இலவசங்களால் சோம்பேறியாக்கி எங்கள் பெருமைகளை அழிக்கத் துணிந்ததற்கா?
இந்திய துணைக்கண்டத்தலிருந்த அத்தனை இளைஞரையும் நற்கனவுகான வித்திட்டானே அப்துல்கலாம் என்ற ஒரு தமிழன், நினைவிருக்கா? இருந்திருந்தால் அந்த முந்நாள் முதல் குடிமகனை, தமிழை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளை உறக்க கூறி பெருமை சேர்தவனின் இறுதி சடங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பிரதிதிநிதிகளும் வந்து தத்தம் மரியாதையை செலுத்தியபோது சதைப்பிண்டமாய் அத்தனை கல்நெஞ்சத்தோடு வீட்டிலிருந்தாயே அதை மறக்கவா?
பெருமழையில் தமிழக மக்கள் அல்லோலப்பட்டுக்கொண்டிருந்த போதும் கூட உன் படம் ஒட்ட நல்லோர் கொண்டுவந்த நிவாரணங்களை பறித்துப்பிடுங்கினரே உன் எடுபிடிகள் அவர்கள் செயல்கண்டு நீ மகிழ்ந்தாயே அதற்காகவா?
இல்லை ஒரு மாநில முதல்வராக இருந்துக்கொண்டு பெருமழையில் தவித்தவர்களுக்கு ஆதரவாக நான்கு வார்த்தை பேசாமல் வாக்காளப்பெருமக்களே என்று உன்னை தேர்ந்தெடுத்தவர்களையே கொச்சைப்படுத்தினாயே அதற்காகவா? இல்லை அம்மாவின் ஆணைக்கிணங்க மழை வந்தது என புல்லுறுவிகள் பேசினரே அப்போதும் குளுகுளு என மகிந்தாயே அதற்காகவா?
அரசாங்க வேலைகள் அனைத்தையும் உன் புகழ்பாடும் போக்கில் வைத்து வெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரியை சிறிது சிறிதாக திறக்க உன் அனுமதிகேட்டு காலம்கடந்து செயல்பட்ட அரசு இயந்திரத்தால் எத்தனை எத்தனையோ உயிர்கள் பிறிந்தனவே, உலகுக்கே உணவளித்த தமிழர்கள் வீட்டுமாடிகளில் பிச்சைகேட்டு வானத்தை பார்க்கவைத்தாயே அதற்காகவா?
உலக முதலீட்டாளர் மாநாடு என்று கூத்தாட்டம் போட்டாயே, லச்சக்கணக்கான கோடிகளில் முதலீடு என்றாயே, பத்திரிக்கை வாயிலாக எங்களுடன் உறவாடுவேன் என்றாயே, நாலும் பொழுதும் எங்களுடன் நிற்பேன் என்றாயே இதெல்லாம் குடித்தகுடிமகன் மறக்கலாம் ஆனால் தமிழ் மக்கள் மறவோம் மிடாஸ் பொய்களின் கூடாரமாக அதில் உலவும் தேவியாக நீயும் உன் தோழியும் வாழ்ந்தீரே அதற்க்காகவா?
குமாரசாமி கணக்கில் சிறை வென்றீரே, டான்சி வழக்கில் உச்சநீதிமன்ற அறிவுரை பெற்றீரே அதற்காகவா?
ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழக கடன் நாலரை லட்சம் கோடிகளாக மாறியதே, அதுவும் ஆயிரங்கோடிகளில் கட்டப்பட்டு வரி விடுமுறையை கடந்த கார் கம்பெனிகளின் வருவாயும், பன்மடங்காக உயர்த்தப்பட்ட மின், பால் மற்றும் அத்தியாவசிய விலை உயர்வால் ஏற்ப்பட்ட வருவாயும், பெட்ரோலிய பொருள் விலை வீழ்ந்தபோதிலும் தமிழக மற்றும் நடுவண் அரசும் போட்டிபோட்டு ஈட்டிய வரிவருவாயும், வேண்டாம் வேண்டாம் என்றாலும் சாராயம் விற்று அதிலும் பணம் பார்தாயே, ஒரே ஒரு பெரிய திட்டமும் நடைமுறைப்படுத்தி அதில் செலவு செய்யாமல் சேமித்த காசும் எங்கே போனது? எப்படி வந்தது இந்த கடன்?
உன்னை துறவிபோல உருவகப்படுத்தினாயே ஆட்சியில் இருந்தபோது இரண்டுமுறை ஊழல் வழக்குகளில் சிக்கி பதவி பறிபோன பின்பும் ஆயிரம் கோடிகளில் திரையரங்கம் எளிமையை பாராட்டும் துறவிக்கு தேவையா இல்லை ஆயிரம் கோடி திரையரங்கம் மட்டுமே எங்களுக்கு தெரியவந்ததென்ற ஆணவமா?
நெஞ்சை நிமிர்த்தி அறம்பேண ஆட்சியர்களை அமைச்சர்களை அறிவுரைக்காமல் கூனிக் குறுகி உன் காலில் விழவைத்து பணம் மட்டுமே அவர்களுக்கு வழியென பயிற்றுவிற்று அன்மையில் உன் அன்புக்குரியவர்களே உன்னை ஏமாற்றினரே அதை ஏற்பதா?
செய்வீர்களா செய்வீர்களா என்று கோமாளி கூச்சலிட்டு நாளொரு பொழுதும் எங்களுக்கு நகைப்பூட்டினாயே அதையா? அல்லது இந்தியாவில் உற்பத்தி திறனில் 15 சதவீதமாக இருந்த தமிழ்நாடு பட்டியலில் கடந்த நான்காண்டு காலத்தில் காணாமல் போனதே, ஐம்பதாவது அல்லது நூறாவதாக முறையாக அமைச்சர்கள் மாற்றப்பட்டனரே அது அவர்களின் ஊழலுக்காகவா, திறனற்ற நிலைக்காகவா, உன்னை துதிக்காததாலா, இல்லை உன்னால் சரியானவர்களை நியமிக்க முடியாமல் போனதனாலா, இல்லை உன்கட்சியை கின்னஸ் போன்ற சாதனை பட்டியலில் இடம்பெற வைக்கும் உன்னத நோக்கத்தினாலா?
எதனால் என தார்மீக அடிப்படையில் தெரிவிக்க தயாரா? இவற்க்கெல்லாம் மேலாய் இறந்த இராணுவவீரனின் பிணத்திற்கு முன்னாலும் உன் படமொட்டி கேவலம் விளம்பரம் தேட துணிந்தாயே அதையா எதை எதை ஏற்பது எதை மறப்பது? என்ன உண்டு உன்னிடம் என்று துணிந்தாய் எங்கள் ஓட்டு கேட்டிட?
இலவசங்களையும், கத்தைக் கத்தையாய் பணத்தை கொண்டோ, அழகாக பேசியோ ஏமாற்றிவிட நாங்கள் இன்னும் ஏமாளிகள் அல்ல ...
வரும் மே மாதம் நீ போட்ட கணக்கு தப்பென்று உனக்கே புரியவைப்போம், அன்றே புரியும் தமிழக மக்கள் மனதார கூறியது செய்தோம் பார்தீர்களா பார்தீர்களா என்று.
JayaFails‬ பக்கத்திற்கு ஒரு தோழர் அனுப்பி வைத்த கட்டுரை இது!

No comments:

Post a Comment

Click Here

Contact Form

Name

Email *

Message *

Click Here