Latest News

14 Apr 2016

அதிமுக அரசின் ஐந்தாண்டு சாதனைப் பட்டியல்

ஜெயலிதாவின் தலைமையிலான அதிமுக அரசின் ஐந்தாண்டு சாதனைப் பட்டியல் இதுதான்:

(அவசியம் படித்து அதிகம் பகிரவும்)

* வெற்றி பெற்ற முதல் நாள் ‘உங்கள் அரசு’ என்ற வார்த்தை மறுநாள் ‘நான், எனது அரசு’ என்றானது.
* சமச்சீர் கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
* பாட புத்தகங்களை அச்சடித்து ரூ. 450 கோடியை வீணடித்தது.
* அண்ணா நூலகத்தை நாசப்படுத்தியது.
* பஸ் கட்டணம் உயர்த்தியது.
* பால் விலையை உயர்த்தியது.
* மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
* கடுமையான மின் தட்டுபாட்டை ஏற்படுத்தியது.
* ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காதது.
* தொழில் வளர்ச்சியை முடக்கியது.
* தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டே ஓடியது.
* சட்டசபையை ‘பெஞ்ச் தட்டும் சபையாக’ மாற்றியது.
* கரும்பு விவசாயிகளை கதற விட்டது.
* நெல் விவசாயிகளை நெம்பி எடுத்தது.
* கிராம, தாலுகா அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
* சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
* உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்தை பயணிகளுக்கு கொடுத்தது.
* அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
* தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
* கொடநாட்டில் வாசம்.
* பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
* மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
* இலக்கு வைத்து மது விற்றது.
* தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
* ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
* நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
* அமைச்சர்கள் மண் சோறு தின்றது.
* தாது மணலை கொள்ளையடித்தது.
* ஆவின் ஊழல்.
* கமல்ஹாசனை கலங்கடித்தது.
* விஜய்யை வியர்க்க வைத்தது.
* சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
* கனிமவளத்தை களவாடியது.
* அப்துல் கலாமை அவமதித்தது.
* ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
* 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
* முட்டை, பருப்பு ஊழல்.
* மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.
* லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது.
* பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
* நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது.
* ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
* தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
* திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர்.
* பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
* செவிலியரை சொல்லியடித்தது.
* உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம்.
* ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
* ஆர்.கே.நகரில் இமாலய கள்ள ஓட்டு.
* வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
* புரட்சிகர மக்கள் பாடகர் கோவனை கைது செய்தது.
* பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
* மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
* ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
* விஷன் 2023 வெளியே வராமலே போனது.
* மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்
JayaFails‬

No comments:

Post a Comment

Click Here

Contact Form

Name

Email *

Message *

Click Here